காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் மாத்தறையில் இன்று சந்திப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்டச் செயலக அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது என்று அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளுடனும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
 காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்ட பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12 ஆம் திகதி மன்னாரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.