அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் செயற்பட வேண்டும்!

அரச சார்பற்ற நிறுவனங்கள், மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லிந்துலையில் இன்று இடம்பெற்ற வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

 அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகப் பகுதிகளில் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவித்தி அமைச்சு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் முன்வைத்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும்.

 சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைச்சோடு இணைந்து பணியாற்றாது அமைச்சின் கொள்கைத் திட்டத்துக்கு முரணான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.