தமிழின இனப்படுகொலைக்கு நீதி கோரி ஜேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு!

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பன்னாட்டு சமூகத்தை கவனயீர்க்க பேர்லின் நகரத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட  கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம் காலை ஹம்பூர்க் நகர மத்தியிலும் மாலை கண்ணோவர் நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது . "பேசப்படாத உண்மைகள் " எனும் கண்காட்சி ஈழத்தமிழர்களின் வரலாற்று பதிவுகளையும் , ஈழத்தமிழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறும்  இனவழிப்பு விபரங்களையும் ஆதாரபூர்வமாக உள்ளடக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியை வேற்றின மக்கள் பார்வையிட்டத்தோடு தமது கரிசனையையும் ,அதே நேரத்தில்  ஐநாவின் பாராமுகத்தை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்தனர் . இக் கண்காட்சியில் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் , யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். 

நாளையை தினம் காலை 10 மணிமுதல் மதியம் 14 மணிவரை இக் கவனயீர்ப்பு கண்காட்சி Osnabrück தலைமை தொடரூந்து வெளி வளாகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.