இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏ நிலைக்கு தரமுயர்வு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஏ நிலை மனித
உரிமைகள் ஆணைக்குழுவாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் கூட்டமைப்பான பீ.ஏ.என்.எச்.ஆர்.ஐ யினால் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1993ஆம் ஆண்டின் பாரிஸ் இணக்கப்பாட்டுக்கு அமைவாக ஒவ்வொரு நாடுகளினதும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த காலங்களில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்டமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏ தரம் கொண்டதாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்னாசிய வலயத்தில் ஏ தரம் பெற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் வரிசையில் இலங்கை தவிர இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மடடுமே இடம்பெற்றுள்ளன.
Powered by Blogger.