வைரஸ் காய்ச்சலால் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!

தென் மாகாணத்தில் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்
காரணமாக, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த குழந்தை ஒன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஒழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக காலி கராப்பிட்டிய ​போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது.

இதேவேளை, தென்மாகாணத்தில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரையில், 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.