யாழில் ஒரே நாளில்.குடும்ப்பத்தில் குருதிக்கொடை வழங்கியுள்ள சம்பவம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏழாவது
வருடமாகவும் ஒரேநாளில் யாழில் குருதிக்கொடை வழங்கியுள்ள சம்பவம் பலரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் குறித்த செயற்பாடு ஒரு முன்னுதாரணமான செயற்பாடெனவும் பலரும் பாராட்டியுள்ளனர்.
ஸ்ரீராம் ஜிம் நிலையத்தினரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) முற்பகல் யாழ்.மருதனார்மடம் சந்திக்கு அருகிலுள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் குருதிக்கொடை முகாமொன்று நடைபெற்றது.
இந்தக் குருதிக்கொடை முகாம் தெல்லிப்பழை ஆதார வாய்த்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இடம்பெற்றது.
இந்தக் குருதிக்கொடை முகாமில் யாழ்.கோண்டாவில் குமரக்கோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜா ரஜீவன், செல்வராஜா ஆதவன், செல்வராஜா மதுசன் ஆகிய மூன்று இளைஞர்களும் வருடாந்தக் குருதிக்கொடை முகாமில் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி வழங்கினர்.
குறித்த மூன்று சகோதரர்களினதும் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்பாக ஸ்ரீராம் ஜிம் நிலைய இயக்குனரும், பயிற்சி ஆசிரியருமான இராஜேந்திரம் அருந்தீபன் மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் உள்ளிட்ட பலர் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.Powered by Blogger.