மெரினா தமிழர் கடலை நோக்கி ஓங்கி ஓலித்த இனப்படுகொலைக் குரல்கள்!

எதிர் கால சந்ததிக்கு சொல்லாமல் சென்றுவிடாதீர்கள் ....
நாம் கடவுளை நேரில் கண்டோம் என்று, ஆலமரமொன்று கிளை பரப்பி நிழலாய் நின்றது என்று, 
தமிழ் உலகறிய வளர்த்த வரலாறு எமதென்று,
மேட்டுக்குடியின் ஆதிக்கம் தகர்த்தோம் என்று, 
தரை கடல் ஆகாயம் பாதுகாக்க படை வளர்த்தோம் என்று,
வல்லரசே ஆடிப்போய் அமர்ந்ததென்று,
விட்ட தவறுகளில் இருந்து பாடம் படித்து தூய்மையானோம் என்று,
அண்டை நாட்டு அரசியல்வாதிகளுக்கு வாக்குவங்கியானோம் என்று,
ஒன்றே குலம் ஒருவனே தலைவன் என்ற திருமூலர் கூற்றை மெய்ப்பித்தோம் என்று,
தவறுகள் இரண்டடியில் திருத்தப்பட்டது திருக்குறள் போல் என்று,
வீரம் மானம் என்ற மூன்றெழுத்துக்கு உலகத்தலைவர்கள் எம் ஆறு எழுத்தை உதாரணம் காட்டினர் என்று,
எமக்கான தேவை எம்மாலே கிடைக்க வழிகள் பிறந்தன என்று,
வான் முட்டும் கோபுரங்கள் இல்லை ஆனால் எல்லையில்லா அன்பிருந்தது என்று,
அவர்கள் இருக்கிறார்கள் என்று நிம்மதியாய் உறங்கி விழித்தோம் என்று, 
நீர்வளம் நிலவளம் போராடி மீட்டு தந்துகொண்டே இருந்தார்கள் என்று, 


Powered by Blogger.