தெற்கு லண்டனில் துப்பாக்கிசூடில் இளைஞன் பலி!

தெற்கு லண்டனில் அமைந்துள்ள கென்னிங்டன் நகரில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூடில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கென்னிங்டன் நகரில் உள்ள வார்ஹாம் தெருவில் குற்றுயிராக கிடந்த இளைஞரை மீட்ட மருத்துவக்குழு உயிரை காப்பாற்ற போராடியுள்ளது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் Rhyhiem Ainsworth Barton(17) என கூறப்படுகிறது. கறுப்பின இளைஞரான பார்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் அறிந்து கதறும் பார்டனின் தாயார் Pretana Morgan, இதுவல்ல வாழ்க்கை, எனது மகனை கொலைக்கு தரவா இத்தனை ஆண்டுகாலம் வளர்த்தேன் என கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகத்தின் மீது பற்றுகொண்டுள்ள ஒரு மகனைப் பெற நான் புண்ணியம் செய்யாமல் போனேனே என கதறியது அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.இந்த ஆண்டில் மட்டும் லண்டன் மாநகரில் இதுவரை கத்தியால் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டும் மொத்தம் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானான வழக்குகள் இதுவரை எந்த முன்னேற்றமும் இன்றி பாதியில் நின்று போயுள்ளது.

பார்டன் கொலை வழக்கு தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையில் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் அல்லது சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.