முதலமைச்சர் விடுவிக்கப்பட்ட வலி வடக்கில் பகுதிகளுக்கு விஜயம்!

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விஜயம் மேற்கொண்டுள்ளார். 
இன்று காலை 10.30 மணிக்கு மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மீள்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார். 
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் பா.கஜதீபன்  மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.