முள்­ளி­வாய்க்­கா­ல் நினைவேந்தலால் நாடா­ளு­மன்­றில் களேபரம்!

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் கடந்த 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் நடை­பெற்ற “முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல்’’ நிகழ்வு தொடர்­பி­லும், இறு­திப்­போர் குறித்து அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­து­கள் தொடர்பா­க­வும், மகிந்த அணி­யான பொது எதி­ரணி நாடா­ளு­மன்­றத்­தில் இன்று கேள்­விக் கணை­க­ளைத் தொடுக்­க­வுள்­ளது.

 மே மாதத்­துக்­கு­ரிய இரண்­டாம் வார நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொ­டர் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யில் இன்று பிற்­ப­கல் ஒரு மணிக்கு ஆரம்­ப­மா­கின்­றது. சபா­நா­ய­கர் அறி­விப்பு, பொது­ம­னுத் தாக்­கல், வாய்­மூல விடைக்­கான கேள்­விச்­சுற்று உட்­பட தினப் பணி­கள் முடி­வ­டைந்த பின்­னர், பொது எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­த­ன­வால் கேள்­வி­கள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 “தமி­ழி­னப் படு­கொலை நாள்’ என்ற தொனிப்­பொ­ரு­ளின் கீழேயே வடக்கு மாகாண சபை­யால் இந்த நிகழ்வு நடத்­தப்­பட்­டுள்­ளது. அதைத் தடுப்­ப­தற்கு அரசு எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. இதன்­மூ­லம் இலங்­கை­யில் இனப்­ப­டு­கொலை நடந்­துள்­ளது என்ற தக­வ­லையா சர்­வ­தேச சமூ­கத்­துக்கு அரசு வழங்­கப் பார்க்­கின்­றது? என்­றும், நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்­பில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்­டில் அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­து­கள் தொடர்­பில் அர­சின் நிலைப்­பாடு என்ன? என்­றும் அவர் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.