"முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 7 - சிறுவர்களின் வெளியீடு!

புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன
அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 7 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால்  "முள்ளிவாய்க்கால் முற்றம்"  எனும் சிறுவர்களின் ஆக்கம்  கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பெரும்வலியை எடுத்துரைக்கும் கவிதைகள்,தமிழனை தலைநிமிர வைக்கும்  எமது தேசியத்தலைவரின் படங்களை, தமிழீழ வரைபடத்தை, தமிழீழ அடையாளங்களை, விடுதலையின் அவசியத்தை உணர்த்தும் சித்திரங்களை உள்கொண்டதாக இவ்வருட "முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ் 7 நேற்றைய தினம் பேர்லின் நகரத்தில் வெளியிடப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் மண்ணிலே கொடூரமாக கொல்லப்பட்ட  அனைத்து உறவுகளையும், அந்த மண்ணுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் வணங்கி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி 

Powered by Blogger.