ஆசிரியர்களின்மையால் மாணவர்கள் பாதிப்பு!

சப்­ர­க­முவ, ஊவா ஆகிய மாகா­ணங்­களில் கடந்தாண்டு நடை­பெற்ற தமிழ்­மொழி மூல க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்கள் கணிதம், விஞ்­ஞானம் உள்­ளிட்ட ஏனைய பாடங்­க­ளிலும் அதி திறமை சித்தி பெற்­றி­ருந்­தனர்.
இருப்­பினும் குறித்த மாவட்­டங்­களில் கணிதம், விஞ்­ஞானம் ஆகிய பாடங்­களில் உயர்­தர வகுப்­பிற்குரிய ஆசி­ரி­யர்களின்­மையால் கலை மற்றும் வர்த்­தக பிரிவில் கல்­வியை தொடரக்கூடிய நிலை தோன்றி இருப்­ப­தாக மாண­வர்­களும் பெற்­றோர்­களும் விசனம் தெரி­விக்­கின்­றனர்.
மேலும் மிக அருகிலுள்ள மத்­திய மாகா­ணத்தில் அதற்­கான வாய்ப்பும் வச­திகளும் இருந்தும் ஒரு சிலர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையால் அங்கு கல்­வியை மேற்­கொள்ள முடி­யாத நிலை இருப்­ப­தா­கவும் மேலும் சில வசதி படைத்த பெற்­றோர்­ மாத்திரம் தங்கள் பிள்­ளைகளை வடக்கு–கிழக்கு மற்றும் கொழும்பு நக­ரங்­க­ளுக்கும் அனுப்பி உயர் கல்­வி­யினை தொடர முயற்­சித்து வரு­கின்­றனர்.
இதனால் பொரு­ளா­தார ரீதியில் பின்­தள்­ளப்­பட்­டுள்ள மாண­வர்­களின் எதிர்­காலக் கன­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.
ஆகையால் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.