யாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன வழி காட்டிகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதி பெயர்களுடன் திசைகாட்டும் மைல்
கல் தூன்கள் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களால் (RDA) சீரமைப்புச் செய்யப்படுகின்றது.

 இவை போரின் பின்னரும் வீதி அகலிப்புக்களின் பின்னரும் கடந்த சில வருடங்கச் சீர்செய்யப்படாதிருந்தது. வாகன விபத்துக்களால் கூட சேதமடைந்து காணப்பட்டன. அவற்றின் மீது விளம்பர சுவரொட்டிகளை அதில் ஒட்டியும் காணப்பட்டால் பயணிகள் தமது பயண வீதியை இனங்காண முடியாது சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.

 தற்போது யாழ்ப்பாணம் காரைநகர் ஆனைக்கோட்டையூடான வீதிகளில் உள்ள மைல் கல் தூண்கள் நிறமூட்டப்பட்டு அவற்றில் வீதிகளின் பெயர், எவ்வளவு கிலோமீற்றர் தூரம் என்பன மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு வருகின்றன. சேதமடைந்துள்ள தூண்கள் சீரமைக்கப்படுகின்றன.


Powered by Blogger.