ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்யவும் தயாராக இருப்பதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ராஜபக்ச அணி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை பலம் தமது அணியினருக்கே கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவருக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது தமது அணியின் வேட்பாளர் இலகுவாக வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.