தொடரும் பணி புறக்கணிப்புக்கள்!

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.   அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட   தெரிவித்தார்.

 வேதன முரண்பாடுகளை தீர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இதேவேளை, மின் பொறியியலாளர்களால் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.