வரிச்சுமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை!

அரசாங்கம், மக்கள் மீது தொடர்ச்சியாக சுமத்தும் வரிச்சுமை உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்து போராட்டத்தை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்றை அமைக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ஸ மற்றும் குமார வெல்கம ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.


Powered by Blogger.