மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் கடந்த ஒருவார காலமாக நிலவிய மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்திருந்தாலும் மண்சரிவு தொடர்பாக தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை கேட்டுள்ளது.
இதன்படி இரத்தினபுரி , கேகாலை , நுவரெலியா , களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய கால நிலை குறைவடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில் மேற்படி மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக் கூடுமெனவும் இதனால் தொடர்ந்து மண்சரிவு குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் மக்களை கேட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையின் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி , எலபாத்த , குருவிற்ற , எகலியகொட ஆகிய பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தில் புளத்கொஹுபிட்டிய , தெஹியோவிற்ற , தெரணியகல , ருவான்வெல , அரநாயக்க , மாவனெல்ல ஆகிய பிரதேசங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ , கொத்மலை , நுவரெலியா ஆகிய பிரதேசங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர , அகலவத்த , புளத்சிங்கள , இங்கிரிய , வலல்விற்ற ஆகிய பிரதேசங்களிலும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய , நாகொட , நெலுவ மற்றும் தவலம ஆகிய பிரதேசங்களிலும் கடந்த ஒரு வார காலமாக விடுக்கப்பட்டுள்ள மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.