மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்!

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.