விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்க இடமளிக்க முடியாது!

இராணுவ ஆட்சி ஒன்றை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்க இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு ஏற்ற முற்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலை உருவாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.