வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 14ம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் பலப்படுத்துவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய கூறினார். 

இதேவேளை தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.