நல்லிணக்கம் என்ற போர்வையில் அரசாங்கம் பக்கச்சார்பு!

தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஒரு தரப்பினருக்கு மாத்திரமே சார்பாகச் செயற்படுகின்றது. துக்க தினத்தை வட கிழக்கு மக்கள் மாத்திரம் அனுஷ்டிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அரசாங்கம் தெற்கில் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் தியாகங்களை மறந்துவிட்டது." என லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

 இறுதி யுத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவு கூர்ந்து மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட துக்க தினம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

யுத்த்தில் உயிரிழந்தவர்களை நினைவுவுப்படுத்த மே 18 துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தெற்கில் யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுப்படுத்த அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளினையும் மேற்கொள்ளவில்லை. நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் மே 18 தினத்தினை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும்.

யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதில் எவ்வித தவறுகளும் இல்லை, அதனை அரசியல் மயப்படுத்தி தடை செய்யவும் முடியாது என அமைச்சரவையின் இணைபேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட கருத்துக்கு தற்போது தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும்   கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விடயத்தினை எதிர்ப்பவர்கள் சற்று சிந்தித்தே செயற்பட வேண்டும். தெற்கில் தற்போது தமிழ் மற்றும்  சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் காணப்பட்டு வருகின்றது . இவ்வாறான எதிர்ப்பு கருத்துக்களின் காரணமாக மீண்டும் தெற்கில் இனபிரச்சினைகள் தோற்றம் பெறும். எதிர்ப்பவர்கள் தாம் எதிர்ப்பதற்கான முறையான காரணத்தினை பொது மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

2009ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் இன்றும் உலகில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அழுத்தங்களின் காரணமாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆனையகம் இலங்கை தொடர்பில் தொடர்ந்து போர் குற்ற  விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவுகள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் எதிர் விளைவுகளை தோற்றுவிக்கும் என்ற  காரணத்தினாலேயே தென்னிலங்கை அரசியல்வாதிகள் மே 18 தினத்தினை எதிர்க்கின்றார்கள் . இதில் தேசிய பாதுகாப்பே முதன்மைப்படுத்தபட வேண்டும். இதனை வடக்கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் 30 வருட யுத்தம் தோற்றம் பெறுவதற்கு அக்காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கமே காரணம் தமிழ் மக்களை அரசாங்கத்தில்  இணைத்துக் கொள்ள வேண்டும் என்று லங்கா சமசமாஜ கட்சி எடுத்துரைத்தது . ஆனால் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டது அதன் பெறுபேறே 30 வருட கால கொடிய யுத்தம். நாட்டில் மீண்டும் இது போன்ற யுத்தம் ஏற்பட கூடாது." என்றார்.

Powered by Blogger.