வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்த நடவடிக்கை!

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்திகள் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம்  பிரதேச சபை தவிசாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சனுக்கிடையேயான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

 இக் கலந்துரையாடல் தொடர்பில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

 "வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கீழ் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் தேவைகள் குறித்தும் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் விசேடவிதமான கலந்துரையாடியுள்ளேன்.

 குறிப்பாக பிரதேச சபைக்குட்பட்ட ஆளணி வெற்றிடங்கள் தொடர்பிலும் வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் பிரதேச சபைக்குத் தேவையான வாகனங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய கடன் திட்டமான உள்ளூர் கடன் அபிவிருத்தி நிதியத்திற்கூடாக 50 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியினை கோரியுள்ளோம்.

 குறிப்பாக இக் கடன் திட்டத்தின் ஊடாக சங்கானை நகர மையப்பகுதியில் கடைத்தொகுதி மற்றும் அலுவலகத் தொகுதிகள் அமைத்தல் தலைமைக்காரியாலயத்தில் சூரிய மின் சக்தி மூலமான மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவ தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

 இவ்விடயத்தில் கூடுதலான விடயங்களை கவனத்தில் எடுத்து அவற்றை நடமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆணையாளர் ;உறுதியளித்துள்ளார்."  என  தெரவித்தார்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.