பொன்சேகாவின் அமைச்சுப் பதவி பறிக்கப்படலாம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்தமையால் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் அவரது அமைச்சு பதவியும் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது அவர் ஜனாதிபதியை விமர்சித்திருந்தார்.

இதன் காரணமாக தற்போது அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி சரத் பொன்சேகாவின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அவரது அமைச்சு பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்குமாறும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Powered by Blogger.