நாமலுக்கு எதிரான வழக்கின் வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது!

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. 

இதன்பேது அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகேயின் நெறிப்படுத்தலில் பொஸ்டன் கெப்பிடல் எனும் நிறுவனத்தின் தலைவரிடம் சாட்சி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், பிரதிவாதி சார்பான சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த குறுக்கு விசாரணையின் போது, முன்னதாக இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய 05 வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என்று சாட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார். 

இதனையடுத்து மேலதிக குறுக்கு விசாரணை நடவடிக்கை நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்
Powered by Blogger.