குடும்பத்தையே கத்தியால் குத்திவிட்டு தற்கொலை!

பிங்கிரிய, மேல் கடிகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவி, குழந்தை மற்றும் மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் இன்று பகல் 01.35 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் குளியாப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 06 மாதங்களான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. 

24 வயதுடைய மனைவி, 42 வயதுடைய மனைவியின் தாய் மற்றும் 62 வயதுடைய மனைவியின் தந்தை ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தற்கொலை செய்து கொண்ட நபர் 03 மாதங்களாக வீட்டை விட்டு பிரிந்து இருந்துள்ள நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட நபரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், அவர் ஏதாவது வெடிக்கும் பொருளை பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Powered by Blogger.