"ஆர்யாவிடம் ஏமார்ந்த விரக்த்தியில்" விபரீத முடிவு.!

நடிகர் ஆர்யா, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில், ஒளிப்பரப்பான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சி மூலம், திருமணத்திற்கு பெண் தேடினார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள மொத்தம் 70 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் இருந்து 16 பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் டேட்டிங், ரொமான்ஸ், கட்டி புடி வைத்தியம் என பல லீலைகளை அரங்கேற்றினார் ஆர்யா.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து பெண்களும் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில்,  போட்டியாளர்களில் ஒருவராக இருந்த, அபர்ணதி பல முறை தன்னுடைய காதலை ஆர்யாவிடம் வெளிப்படையாக கூறி ஆசிங்கப்பட்டுள்ளார். 
இதனால் மற்ற போட்டியாளர்களை விட, ரசிகர்களுக்கு அபர்ணதியை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். ஆர்யாவை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியின் மூலம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என கனவுக் கண்டுக்கொண்டிருந்த அபர்ணதி, திடீர் என கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டர். 
ஆர்யாவின் ஆசை வார்த்தைகளால், அவரிடம் மனதை பறிக்கொடுத்து ஏமார்ந்த அபர்ணதி, இனி தான் திருமணமே செய்துக்கொள்ளப் போவதில்லை என்கிற விபரீதமான முடிவை எடுத்துள்ளார். 
இது குறித்து அவர் கூறுகையில், "நான் கல்யாணம் பண்ணமாட்டேன். நான் வாழப்போவது 40 அல்லது 50 வருடங்கள் தான். அதனால் சாகும்வரை லைப்பை ஜாலியா... என்ஜாய் பண்ண போறேன்... என்னை கல்யாணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தவேண்டாம் என பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். எனக்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை, அதை தாண்டி எவ்ளோவோ இருக்கு. உலகத்தை சுத்த போறேன்" என கூறியுள்ளார்.
Powered by Blogger.