மண்­டை­தீவு சந்­தி­யில் அமைந் துள்ள புனித பேது­ரு­வா­ன­வ­ரின் சிலை உடைப்பு!

யாழ்ப்­பா­ணம் மண்­டை­தீவு சந்­தி­யில் அமைந் துள்ள புனித பேது­ரு­வா­ன­வ­ரின் சிலை உடைக்­கப்­பட்­டுள்­ளது. சிலையை உடைத்­த­வர் என்று கூறப்­ப­டு­ப­வர் மக்­க­ளால் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.
இந்­தச் சம்­ப­வம் நேற்று மதி­யம் நடந்­துள்­ளது. சிலையை கூண்­டில் இருந்து எடுத்து கீழே போட்டு உடைப்­பதை அவ­தா­னித்த ஊர் மக்­கள் அவ­ரைக் பிடித்து மண்டை தீவு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்­பும் சிலை அமைத்­துள்ள வெளிப்­புற கண்­ணாடி தொகுதி உடைக்­கப்­பட்­டது. பின்­னர் சீர­மைத்து கொடுக்­கப்­பட்­டது.
மதங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்­க­கத்தை குழப்­பும் வகை­யில் செயற்­ப­டு­வோர் மீது உரி­ய­வர்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மக்­கள் கேட்டு கொண்­டுள்­ள­னர் .

No comments

Powered by Blogger.