புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பின்னர் தப்பிச் சென்ற நபரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மருதானை  சேக்குவத்தை சந்திக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் 29 வயதான கொழும்பு-  12  பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

 பெப்ரவரி 16 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றதோடு. இதன்போது கொல்லப்பட்டவர் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துர மாதுசுடன் நெருங்கிய தொடர்புடைய மொகமட் ரிஸான் என்பவர் ஆகும்.

 துப்பாக்கி பிரயோகத்திற்கு பின்னர் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேவாசிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

 இவர் ரம்புக்கனை பகுதியை சேர்ந்த நிரோஷன் குமார என்ற 25 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.