மக்கள் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகள்!

ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் நச்சுப் பாம்புகள் மக்கள் வாழும்
குடியிருப்புக்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வடிகானுக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் எம்.எல். றெபுபாசம் ஸ்தலத்திற்கு விரைந்து பிரதேச மக்களுடன் குறிப்பிட்ட வடிகான் பகுதிக்குள் பாம்புகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்தப் பகுதி வடிகானுக்குள் இருந்து பெரிய அளவிலான விரியன்புடையன் பாம்பொன்று மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்புக் கருதி அந்தப் பாம்மை பிரதேசத்தவர்கள் கொன்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விரியன்புடையன் பாம்புகள் உஷ்ணம் நிறைந்த கதகதப்பான சூழ்நிலையில் தமது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டு உணவு தேடிச் சென்று வாழ்பவை என்று விலங்கியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் அந்தப் பகுதியில் பாம்புகள் திரிவதாக தெரிவிக்கப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.