தடுப்புக் காவலில் உள்ள சுன்னாகம் பொலி­ஸாருக்கான பிணை மறுப்பு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காகப் 10 ஆண்டுகள் கடுகாவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலி­ஸாரும் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றும் தள்ளுபடி செய்தது.

சுமணன் என்ற சந்தேகநபரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர்கள் 5 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளநிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

அதை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

Powered by Blogger.