வௌ்ளி விருதை கண்டுபிடிப்பதற்கு பொலிஸாரின் விசாரணைகள் தீவிரம்!

இறுதிக் கிரியைகளின் போது திருடப்பட்ட பிரபல இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட தங்க மயில் (ரனமயூரா) என்றழைக்கப்படும்  வௌ்ளி விருதை கண்டுபிடிப்பதற்கு பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


குறித்த விருது அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது  பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போதே திருடப்பட்டுள்ளது.
ரனமயூரா வாழ்நாள் விருது 2000 ஆம் ஆண்டு இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் 31ஆவது சர்வதேச இந்திய சினிமா விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.