முல்லைத்தீவிலும் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகள்!

கிளிநொச்சியை தொடர்ந்து முல்லைத்தீவிலும் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளன.

 முல்லைத்தீவு ரெட்பானா பகுதியில் செல்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 புலிகளின் ஆயுதங்கள் மற்றும் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்றும் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் நேற்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 அறிவியல்நகர் பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக ஏற்கனவே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படாத நிலையில் தற்போது மீண்டும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

 இதற்கு முன்னர் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, முல்லைத்தீவில் தங்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.