ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில்
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுத் தொடர்பில் சட்டத்துறை வல்லுனர்கள் ஆராய்ந்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட இணைப்புச் செயலாளர் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுத் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு அமைய 1 (3) பிரிவின் படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றி, 2020 ஓகஸ்ட் மாதமே நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.