யாழில் நாளை ஆர்ப்­பாட்­டம்!

அர­சால் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் விலை உயர்வு,
வரிச்சுமை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற் றுக்கு எதி­ராக நாளை செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­தில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது. ஆர்ப்பாட்­டம் யாழ்ப்­பா­ணப் பேருந்து நிலை­யத்துக்கு முன்­பாக காலை 10 மணிக்கு புதிய ஜன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்­சி­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­துக்கு அழைப்­பு­வி­டுக்­கும் முக­மாக அந்­தக் கட்­சி­யின் வட பிராந்­தி­யச் செய­லா­ளர் கா. கதிர்­கா­ம­நா­தனால் வெ­ளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் மேலும் உள்­ள­தா­வது:

இன்­றைய மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான கூட்­டாட்­சி ­யா­னது, முந்­தைய மகிந்த ராஜ­பக்ச சகோ­த­ரர்­க­ளின் பாசிச சர்­வா­தி­கார ஆட்­சியை 2015 இல் அகற்றி, ‘நல்­லாட்சி’ என்ற நாமத்­து­டன் பத­விக்கு வந்­தது. ஜன­நா­ய­கத்தை மீட்­போம், அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­போம், பத்து இலட்­சம் பேருக்கு வேலை வழங்­கு­வோம், மக்­க­ளின் வாழ்க்­கைச் செல­வைக் குறைப்­போம், வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்­து­வோம், இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு கொண்­டு­வ­ரு­வோம், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வோம், ஊழல் மோச­டி­களை அம்­ப­லப்­ப­டுத்தி, அவற்­றில் ஈடு­பட்­டோ­ருக்­குத் தரா­த­ரம் பார்க்­காது தண்­டனை வழங்­கு­வோம் என்­ற­வா­றான வாக்­கு­று­தி­கள் வழங்­கப்­பட்­டன.

ஆனால், இன்­றைய நிலை­தான் என்ன? என்­பதே சிந்­திக்­கப்­ப­ட­ வேண்­டி­ய­தா­கும். மக்­க­ளுக்கு அத்­தி­ய­ாவ­சி­ய­மான உண­வுப் பொருள்­க­ளின் விலை­கள் நாளாந்­தம் உயர்த்­தப்­பட்டு வந்து இன்று உச்­ச­மாகி நிற்­கின்­றன. அரிசி, சீனி, தேங்­காய், மல்லி, மிள­காய், பருப்பு வகை உள்­ளிட்ட உண­வுப் பொருள்­க­ளின் விலை­கள் நூறு, இரு­நூறு என ஏறிக்­கொண்டே செல்­கின்­றன. அன்­றா­டப் பாவ­னைப் பொருள் க­ளின் விலை­க­ளும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­று­டன் கூடவே, எரி­வாயு, பெற்­றோல், டீசல் , மண்­ணெண்­ணெய் விலை­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாகப் பேருந்­துக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் முச்­சக்­க­ர­வண்­டி­கள் உள்­ள­டங்­க­லாக ஏனைய வாக­னங்­க­ளூ­டான போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணங் க­ளும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ளன.

இந்த நிலை­யில் நாட்­டின் ஏகப் பெரும்­பான்­மை­யான தொழி­லா­ளர்­கள், விவ­சா­யி­கள், மீன­வர்­கள் உள்­ளிட்ட உழைக்­கும் மக்­கள் பெரும் வாழ்க்­கைச் செல­வுச் சுமை­யால் பல்­வேறு சிர­மங்­க­ ளை­யும் எதிர்­கொள்­கின்­ற­னர்.

கடந்த அர­சும் இன்­றைய ஆட்­சி­யா­ள­ரும் பன்­னாட்டு நாணய நிதி­யம், உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி போன்­ற­வற்­றி­டம் பெற்ற, பல­கோ­டிக்­க­ணக்­கான கடன்­க­ளை­யும் அவற்­றுக்­கான வட்­டி­க­ளை­யும் மீளச் செலுத்­து­வ­தற்கு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­கள் மூ­லம் பணத்தை வாரி­யெ­டுத்­துக்­கொள்­கின்­றார்­கள்.

அந்­நிய முத­லீ­டு­க­ளுக்கு நாட்­டைத் திறந்­து ­விட்ட அதே­வேளை, தாரா­ள­ம­யம், தனி­யார் மயத்­தி­னூ­டாக அந்­நி­யப் பொருள்­க­ளின் சந்­தை­யாகி நுகர்வு மேலோங்­கி­யது. இத­னால்,எமது நாட்­டின் விவ­சா­ய­மும் சிறு­உற்­பத்­தித் தொழில் க­ளும் சாக­டிக்­கப்­பட்­டன. தேசி­யப் பொரு­ளா­தா­ரம் நாசம் செய்­யப்­பட்­டது.

இது கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளில் பின்­பற்­றப்­பட்ட நாச­கார நவ­தா­ராள பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யின் விளை­வா­கும். உல­க­ம­ய­மா­த­லி­னூ­டான தாரா­ள­ம­ய­மும் தனி­யார்­ம­ய­மும் பெரும் ஊழல்­க­ளை­யும் மோச­டி­க­ளை­யும் சர்­வ­சா­தார­ண­மாக்­கி­விட்­டுள்­ளன.

அதன் தொடர்ச்­சியே முன்­னைய ஆட்­சி­க­ளி­லும் இன்­றைய ஆட்­சி­யி­லும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. ஊழல் மோச­டி­க­ளில் ஈடு­பட்டு நாட்டு மக்­க­ளின் பணத்­தைக் கொள்­ளை­ய­டிப்­ப­வர்­கள் ஆளும் வர்க்­கங்­க­ளின் அர­சி­யல் பிர­திநி­தி­க­ளும், அவர்­க­ளின் உயர்­மட்ட நிர்­வா­கி­க­ளு­மேயா­வர்.

இன்­றைய விலை உயர்­வு­க­ளும், கட்­டண அதி­க­ரிப்­பு­க­ளும், கடன் சுமை­க­ளும், ஊழல் மோச­டி­க­ளும் தவ­றான பொரு­ளா­தா­ரக் கொள்கை நடை­மு­றைப்­ப­டுத்­தல்­க­ளின் மோச­மான எதிர்­வி­ளை­வு­க­ளே­யா­கும். இது மக்­கள் விரோத முத­லா­ளித்­துவ ஏகா­தி­பத்­தி­யத்­தின் நவ­கொ­ல­னி­யத்­தின் கீழான நவ­தா­ராள பொரு­ளா­தார நிகழ்ச்சி நிர­லின் விளை­வே­யா­கும். இத­னால் கடும் பாதிப்பை உழைக்­கும் மக்­களே அன்­றா­டம் அனு­ப­வித்து வரு­கின்­றார்­கள்.

இதை முன்­னெ­டுப்­ப­தில் இன, மத, மொழி, பிர­தேச வேறு­பா­டு­க­ளின்றி முத­லா­ளித்­து­வச் சுரண்­டல் சக்­தி­க­ளும், அடக்­கு­முறை ஆட்­சி­யா­ளர்­க­ளும் ஒரே அணி­யில் நிற்­கின்­றார்­கள். இதில் தமிழ்த் தேசி­யத்­தைக் கூவு­கின்ற தமிழ் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஏனைய குறுந்­தே­சி­ய­ வாத சக்­தி­க­ளும் அதே அணி­யில் நிற்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எனவே, உழைக்­கும் மக்­கள் தமது ஒடுக்­கப்­ப­டும் வர்க்க நிலை­யைப் பொரு­ளா­தார, அர­சி­யல், சமூக நிலை­க­ளின் அடிப்­ப­டை­யில் கண்­டு­ணர்ந்து அனை­வ­ரும் ஓர் அணி­யில் அணி­தி­ர­ள­வேண்­டும். இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் அணி­தி­ர­ளு­மாறு அனை­வ­ரை­யும் அழைத்­து­ நிற்­கின்­றோம் – என்­றுள்­ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.