சிறப்பாக பணியாற்றாத திருநாவுக்கரசர்-குஷ்பு!

தமிழக காங்கிரஸ் செயலற்று இருப்பதாகவும், விரைவில் கட்சியின் மாநில தலைவர் மாற்றப்படுவார் என்றும் காங். தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.


இது குறித்து குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சி எந்தவொரு நடவடிக்கையு இல்லாமல் இருக்கிறது. நேரடியாக கூற வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செயலற்று உள்ளது என்றார். இதனால் அடுத்த சில மாதங்களிலேயே கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்படுவா என்றும் பேட்டியின்போது கூறினார்.


காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு செல்லும் ஒருவரையே மாநிலத்தின் புதிய தலைவராக தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும் அவர் கூறினார்.


தமிழக காங். தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாகவும், கர்நாடக தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும், தமிழக காங்கிரஸ் மீது ராகுல் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவித்தார். தற்போதுள்ள தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்னும்கூட சிறப்பாக பணியாற்றி இருக்கலாம் என்றும் குஷ்பு கூறினார்.

Powered by Blogger.