யாழில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்ற இருவர் கைது!

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிலை கலக்கப்பட்ட
மாவா பாக்கு விற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

யாழ்ப்­பா­ணம் பெரு­மாள் கோயி­லுக்கு அண்­மை­யில் உள்ள கராச்­சி­லி­ருந்து அரைக் கிலோ மாவா­வு­டன் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டார்.

யாழ்ப்­பா­ணம் நக­ரத்தை அண்­டிய பாட­சா­லை­க­ளில் மாண­வர்­களை மையப்­ப­டுத்தி மாவா பாக்கு உள்­ளிட்ட போதைப் பொருள் விற்­பனை செய்­வோ­ரைக் கைது செய்­வ­தற்­காக 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு நேற்று நிய­மிக்­கப்­பட்­டது. 
Powered by Blogger.