வரலக்ஷ்மி எனக்கு கிடைத்த "பொக்கிஷம்"..!

தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகராக வலம் வரும் நடிகர் விஷால்  தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் வரலக்ஷ்மி பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். அப்போது முதன் முதலில் துணை நடிகராக பணிபுரிந்த என்னை ஒரு நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜூன் தான்.
அதன் பிறகு தான் நான் முதலில் "செல்லமே' படத்தில் ஹீரோவாக  நடித்தேன். அதே சமயத்தில் துணை இயக்குனராக இருந்தபோது நான் வாங்கிய சம்பளம் ரூ.100 மட்டுமே எனவும் தெரிவித்து உள்ளார்.
படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்' எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதற்கு அடுத்தப்படியாக பெயருக்காக மட்டும் படத்தை பண்ண கூடாது. பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படத்திலும் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்து உள்ளார். இதே போன்று புதுமுக இயக்குனர் படங்களில் நடிக்க உள்ளேன். காரணம் அது ஒரு சமூதாய பிரச்சனைகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்
வரலக்ஷ்மி பற்றி...
வரலக்ஷ்மி பற்றி தெரிவிக்கும் போது, வரலக்ஷ்மி எனக்கு வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம் என்று தெரிவித்து உள்ளார்.
வரலட்சுமியை எனக்கு 8  வயதிலிருந்தே தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். என்னிடம் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துபவர் வரலக்ஷ்மி என தெரிவித்து உள்ளார்
அவருக்கு தன்னம்பிக்கை அதிகம்..மேலும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்
மிஷ்கின் பற்றி...
வருடத்தில் ஒரு படத்திலாவது மிஷ்கின் உடன் இணைய ஆசை படுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
சண்டை காட்சிகள் தன்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின் என வர தெரிவித்து உள்ளார்.
Powered by Blogger.