காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை!

காதல் விவகாரத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், காதலர்கள் ஒன்றாக தூக்கிட்டு உயிரரை மாயத்துக் கொண்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டையைப் பகுதியில் நடந்துள்ளது.

 காதலி 5 மாதக் கர்ப்பிணி என்பதை அறிந்த காதலன், காதலி வீட்டில் தங்களது திருமணம் குறித்துப் பேசியுள்ளார். இரு வீட்டாரும்   திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரையும், திகிலிவெட்டை சேனைக்காட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து நின்று கதைத்துக்கொண்டு இருப்பதை, ஆடு மேய்க்க சென்ற ஒரு பெண் அவதானித்துள்ளார்.

 அவர் திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் மாத்திரம் இருக்க, காதல் ஜோடிகளை காணவில்லை. மீண்டும் ஆடுகளை அவிழ்த்து வரச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் அதே இடத்தில் இருப்பதை அவதானித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்த பேர்ஷை  திறந்து பார்த்துள்ளார்.

 அவர்களது அடையாள அட்டையுடன், திகிலிவெட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தொலைபேசி இலக்கமும் இருந்தது. அந்த இலக்கத்துக்கு இப் பெண் அழைப்பை எடுத்து, மேற்படி விடயத்தை அறிவித்து, அருகிலுள்ள காட்டுக்குள் யானைகளின் நடமாட்டம் இருப்பதால், இவர்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாமென கூறியிருக்கிறார்.

 உடனடியாக அந்த இடத்தை நோக்கி திகிலிவெட்டைப் பிரதேச மக்கள் சமூகமளித்து தேடுதல் நடத்திய போது , இவர்களிருவரும் அருகருகே மரமொன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Powered by Blogger.