அதிவேக பாதையில் பயணிப்பவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகனங்கள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அதேவேளை ஒவ்வொரு வாகனங்களினதும் பிரதான மின் விளக்கை ஔிரச்செய்து கொண்டு பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.