யதார்த்தபூர்வமாகவே அமைச்சு பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன!

விகிதாசாரப்படியே சு.கவுக்கு ஒதுக்கவேண்டிய அமைச்சு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எமக்கு அமைச்சுகள் குறைக்கப்படவில்லை என தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி ஏற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர்,
யதார்த்தபூர்வமாகவே அமைச்சு பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. ஒழுங்கின்றி இருந்த பொறுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. வர்த்தமானியூடாகவும் யதார்த்தபூர்வமாக பொறுப்புகள் வழங்கப்படும். அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் பிரச்சினை கிடையாது. விகிதாசாரப்படியே சு.கவுக்கு ஒதுக்கவேண்டிய அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்துள்ளன. அரசில் 23 சு.க எம்.பிக்கள் தான் இருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
இரு கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கையில் கலத்துரையாடி உரியவாறு பொறுப்புகள் பிரித்து வழங்கப்படும்.இதில் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
Powered by Blogger.