துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

ஹொரவப்பொத்தனை - வாகொல்லாகட பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரவப்பொத்தனை - இகலதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ;ஆவார்.

 துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரவப்பொத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் ஹொரவப்பொத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.