பசில் ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும (வாழ்வின் எழுச்சி) அபிவிருத்தித் திணைக்கள நிதியின் 295 இலட்சம் ரூபாயைப் பயன்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் அடங்கிய 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு விநியோகித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவ்விருவருக்கும் எதிராக, மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு ​மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில், இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments

Powered by Blogger.