முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருக்கான வழக்கு 23ஆம் திகதி முதல் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சொத்துக்களின் விபரங்களை 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளியிடாமை தொடர்பில் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குக்களின் விசாரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் இந்த உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.