விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியர் கைது!

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்திற்குக் கடந்த 2-ம் தேதி போன் செய்த மர்ம நபர், மும்பையிலிருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, இண்டிகோ நிறுவன விமானங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.


அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 23 வயதான கார்த்திக்     மாதவ் பட் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இண்டிகோ நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் கார்த்திக் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், பணி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள 3 மாதத்துக்குள் திறனை வளர்த்துக் கொள்ளும்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் வாய்மொழியாக வார்னிங் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த காரியத்தைச் செய்து விட்டதாகவும் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கார்த்திக்கைக் கைது செய்த டெல்லி போலீஸார், மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம் கார்டையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.