சகோதரர்களிடையே பிளவு இல்லை-மகிந்த!

சிலர் கூறுவது போல் ராஜபக்ச சகோதரர்களிடையே எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ச சகோதரர்கள் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். எனினும் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். அதேவேளை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அமைய எந்த நபர்களையும் இலங்கைக்கு அழைத்து வர முடியும். இதன் மூலம் நாட்டின் கலாசாரத்திற்கு அழுத்தங்கள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.    
Powered by Blogger.