யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம் பிக்கு!

காலி, ஊரகஸ் சந்தி பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல பிக்கு ஒருவரும் அவரது சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கவிதை வடிவில் தர்ம உபதேசம் செய்வதில் பிரபலமான குறித்த பிக்குவும் அவரது சாரதியும் தெலிகடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களை தலா 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ள நீதவான் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


தெளிகடை சுனந்தாராமய விகாரையில் வசித்து வரும் 26 வயதான மான்பிட்டியே சிறிசுமண என்ற பிக்குவும் அவரது சாரதியுமே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் ஊரகஸ்சந்தி பிரதேசத்தை சேர்ந்த 19வயதான யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த யுவதி இரண்டாவது சந்தேக நபரின் நண்பி என பொலிஸார் கூறியுள்ளனர்.


ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்று அழைத்துச் சென்று விடுவதாக கூறி சந்தேக நபர்கள், யுவதியை தமது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். யுவதிக்கும் பியர் மதுபானத்தை பருக கொடுத்துள்ளதுடன் சந்தேக நபர்களும் பியர் பருகியுள்ளனர்.


இதனையடுத்து இரவு ஒரு மணியளவில் யுவதியை காரில் அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போது, யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது யுவதி காரின் ஸ்டேரிங்கை சுழற்றியதை அடுத்து வண்டி வீதியை விட்டு விலகி பத்தை ஒன்றுக்குள் விழுந்துள்ளது.


இதனையடுத்து சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பிரதேசவாசிகள் யுவதியை மீட்டு தெலிகடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பத்தைக்குள் கிடந்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Powered by Blogger.