தமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்?

மயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக
தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனராம்.

அண்மையில் விடுவிக்கப்பட சாத்தியமில்லையென ஆரூடம் சொல்லப்பட்ட மயிலிட்டி இறங்குதுறையினை படைத்தரப்பு விடுவித்திருந்தது. இவ்வாறு விடுவிக்கப்படும் போதே மயிலிட்டி ஊடாக புலிகளது தாக்குதல் அச்சம் தொடர்பாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

பொன்னாலை முதல் சாலை வரை பெரும் கடற்கரை பகுதி வெளியேயுள்ள நிலையில் புலிகள் மயிலிட்டி ஊடாக தாக்குதல் நடத்தப்போவதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் இலங்கை படைத்தரப்பின் நிலையுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, பலாலி விமானப்படை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் காணிகளில், 3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றதென, பாதுகாப்புப்பிரிவு புதிய கணக்கொன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23,533 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்களுக்குச் சொந்தமான 683 ஏக்கர் காணி, புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.