அந்நியன் ஸ்டைலில் பிரச்சனைகளை டீல் பண்ணும் கமல்!

மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் கட்சியை அறிவிக்கும் முன் 'மையம் விசில் மொபைல் ஆப்' என்பதைப் பற்றி பேசியிருந்தார். 
இந்நிலையில் இவர் கூறியபடி, மக்களுக்கு மிகவும் எளிய முறையில் உதவும் படி இன்று 5 மணியளவில் 'விசில் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது
இது குறித்து, கமல், முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது...!
மக்கள் கைகட்டி அமைதிக் காப்பதுதான் அனைத்திற்குமான பிரச்னை என்றும், அந்த நிலை மாற பிரச்னைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் மய்யம் விசில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
ஆப் குறித்து வெளியான தகவல்:
இந்த ஆப்பில் மூன்று பிரிவுகள் உள்ளது. மக்கள் அவர்களுடைய பகுதிகளில் நடக்கும் பிரச்சனைகளை புகைப்படம் எடுத்து, முகவரியுடன் இந்த ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். 
இப்படி மக்கள் தரப்பில் இருந்து கூறப்படும் பிரச்சனை உண்மையா என்று ஒரு சில ஆய்வுகள் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்டு. உண்மை என்று தெரியவரும் பச்சத்தில். மக்களின் குறையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது மூன்றாம் நிலை. 
என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற சமூக பிரச்னையை கமல் நடிகர் என்பதால் என்னவோ அந்நியன்.... பட ஸ்டைல்லில் முயற்சி எடுத்து வருவதாக பலரும் கூறுகின்றனர். 

No comments

Powered by Blogger.