யூப் அஸ்மினது உருவ பொம்பை எரித்து போராட்டம்!

முஸ்லிம்களின் ஹபாயா விவகாரம் தொடர்பில் மா காண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்தை கண்டித்து யாழ்.முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

திருகோணமலை சண்முகானந்தா வித்தியாலயத்தில் முஸ்லீம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து செல்வது தொடர்பாக, எதிர் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் முஸ்லீம் பெண்கள் சேலையே அணிந்து செல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கைக்கு ஆதரவாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்.முஸ்லீம் மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் நன்பகல் அவர்களது தொழுகை நறைவடைந்த பின்னர் யாழ்.பச்சைபள்ளிக்கு முன்பாக ஒன்று கூடிய இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினது உருவ பொம்பையையும் தீ்யிட்டு கொழுத்தியிருந்தார்கள். No comments

Powered by Blogger.