பல்­கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யம் விக்­கி­யைச் சந்­திக்க மறுப்பு!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்தில் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­ட­னும், அமைச்சர்களுடனும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் கலந்­து­ரை­யா­டாது என்று அந்­தச் சங்­கத்­தின் தலை­வர் கிருஸ்­ண­மே­னன் தெரி­வித்­தார்.
நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், உறுப்­பி­னர்­கள், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் இன்று சந்­திப்பு நடத்­து­வர் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் முன்­னெ­டுத்­தது. அதில் தமிழ் அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­பு­கள், சிவில் அமைப்­பு­கள் என அனை­வ­ரும் ஒற்­று­மை­யு­டன் ஆத­ரவு தர­வேண்­டும் என்று மாண­வர் ஒன்­றி­யம் கோரி­யி­ருந்­தது.
எனி­னும் கடந்த 3 ஆண்­டு­க­ளாக நினை­வேந்­தலை மாகாண சபையே நடத்­து­கி­றது. இந்த வரு­ட­மும் வடக்கு மாகா­ண­சபை நடத்­தும். அதற்­குத் தேவை­யான உத­வி­களை மாண­வர் ஒன்­றி­யம் வழங்­க­லாம் என்று மாகாண முத­ல­மைச்­சர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்­தார்.
அதை­ய­டுத்து மாண­வர் ஒன்­றி­யத்­துக்­கும், வடக்கு மாகா­ண­ச­பைக்­கு­மி­டை­யில் நிகழ்வை நடத்­து­வது தொடர்­பான சிக்­கல் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. அதை­ய­டு­தது வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட அமைச்­சர்­க­ளுக்­கும் யாழ்ப்­பாண மாண­வர் ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யில் இன்று சந்­திப்பு ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.
இந்த ஏற்­பாட்டை வடக்கு மாகாண முதல்­வர் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்.
அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொள்­ளப் போவ­தில்லை என்று மாண­வர் ஒன்­றி­யத்­தின் தலை­வர் நேற்று இரவு திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சபை இந்த நிகழ்வை அர­சி­ய­லாக்க முனை­கி­றது. அதில் எமக்கு உடன்­பா­டில்லை அத­னா­லேயே இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நாங்­கள் கலந்து கொள்­ள­வில்லை. எனி­னும் மக்­கள், சிவில் சமூ­கத்­தி­னர், பொது அமைப்­பு­க­ளு­டன் இணைந்து முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை நடத்­து­வ­தற்­கான ஒழுங்­க­மைப்­பு­க­ளைத் தொடர்ந்­தும் முன்­னெ­டுப்­போம் என்று அவர் குறிப்­பிட்­டார்.
Powered by Blogger.